Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

இந்தியா - நியூசிலாந்து தரவுப் பகிர்வு ஒப்பந்தம்

இந்தியா - நியூசிலாந்து தரவுப் பகிர்வு ஒப்பந்தம்

இந்த ஏற்பாடு இரு நாடுகளின் சுங்க அதிகாரிகளுக்கும் வர்த்தகம் செய்யப்படும் பொருட்களின் தகவல்கள் மின்னணு முறையில் பரிமாறிக்கொள்ள அனுமதிக்கும்.

பகிரவும் WhatsApp Facebook

இந்தியாவுக்கும், நியூசிலாந்துக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கடந்த 20-ம் தேதி கையெழுத்தான நிலையில், வணிகர்கள் சுங்கவரிச் சலுகைகளைப் பெற உதவும் வகையில் வர்த்தகம் தொடர்பான மூலத் தரவுகளை மின்னணு முறையில் பரிமாறிக்கொள்வதற்கான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் (MoC) கையெழுத்திட்டுள்ளன.

இதுகுறித்து நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

இந்த ஏற்பாடு இரு நாடுகளின் சுங்க அதிகாரிகளுக்கும் வர்த்தகம் செய்யப்படும் பொருட்களின் தகவல்கள் மின்னணு முறையில் பரிமாறிக்கொள்ள அனுமதிக்கும். இதன் மூலம், தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் பொருட்கள் முன்னுரிமைத் தீர்வைக் கட்டணச் சலுகைக்குத் தகுதி பெறுகின்றனவா என்பதை அவர்களால் சரிபார்க்க முடியும்.

மேலும், திறமையான, பாதுகாப்பான மற்றும் கணிக்கக்கூடிய எல்லை தாண்டிய வர்த்தகத்திற்காக, டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் மேம்படுத்தப்பட்ட தகவல் பரிமாற்றத்தைப் பயன்படுத்திக் கொள்வதில் இந்தியா மற்றும் நியூசிலாந்தின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பிரதிபலிக்கிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
நிர்மலா சீதாராமன்–ஜான் ஸ்வின்னி ஆலோசனை
அடுத்த செய்தி
ஜியோ ஐபிஓ-க்கு முதல் நாளில் 3.01 மடங்கு சந்தா

தொடர்புடைய செய்திகள்